புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

சென்னையில் 20 கோடி போதைபொருளுடன் 2 பெண்கள் கைது


சென்னையில் இருந்து இலங்கை வழியாக மலேசியா செல்லும் 'ஏர்லங்கா' விமானம் நேற்று இரவு 9.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
இதில் பயணிக்கும் பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது பழைய வண் ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி (64), ஆவடியைச் சேர்ந்த மல்லிகா (54) ஆகிய 2 பெண்களும் பெரிய பைகளுடன் காத்திருந்தனர். அதில் ஏராளமான மசாலா பொருட்கள் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.  இந்த மாசலா பொருட் களை மலேசியாவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் மல்லிகா, ராஜேஸ்வரி ஆகியோரின் நடவடிக்கைகளில் சுங்கத் துறை  அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாட்டில்கள் அனைத்தையும், மிகுந்த கவனத்துடன் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கள் இருவரும் மசாலா பொருட் களுடன் சேர்த்து 'எபி டெரின்' என்ற போதைப் பொருளை கடத்தி வந்திருப் பது கண்டு பிடிக்கப்பட்டது.

இருவரும் தனித்தனியாக 10 கிலோ எபிடெரின் போதைப்பொருளை பாட்டில்களில் அடைத்து வைத்திருந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த  அதிகாரிகள், போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.

எபிடெரின் போதை பொருளை மல்லிகா, ராஜேஸ்வரி ஆகிய இருவரிடமும் சென்னையில் பதுங்கி இருக்கும் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடுத்து அனுப்பி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் கள் யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.எபிடெரின் போதை பொருள் இந்தியாவில் ஆஸ் பத்திரிகளில் மயக்க ஊசிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வெளி நாடுகளில் இதனை போதைப் பொருளாக பயன்படுத்து கின்றனர்.சென்னையில் இருந்து மலேசியாவுக்கு அதிக அள வில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

ad

ad