புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2014

ஒபாமாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த சதித்திட்டம் உஷார் நிலையில் மத்திய அரசு
எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமர் மோடியும் ஒபாமாவுடன் தொலைபேசியிலும்;, நேரில் சந்தி த்தபோதும் அழைப்பு விடுத்தார். இதை  ஜனாதிபதி ஒபாமா ஏற்றுக் கொண்டார்.

அவரது இந்தியப் பயணத்தை அமெரிக்க அரசும் அதிகாரபூர்வமாக அறிவித்துள் ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்பு நடைபெறும் குடியரசு தின விழாக்களில் அமெரிக்க நாட்டு ஜனா திபதி; ஒருவர் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இத னால் ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

ஜனாதிபதி ஒபாமா தீவிரவாதி களின் அச்சுறுத்தல் பட்டியலில் உள்ளார். ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான படையெடுப்புகள், அல் கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டது, சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது போன்றவற்றால் தீவிரவாதிகளிடம் இருந்து அமெ ரிக்காவுக்கு மிரட்டல் இருக்கிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி; ஒபாமா டில்லி வருகையின் போது தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்று மத்திய அரசின் உளவு நிறுவனங்கள் எச்சரித்துள் ளன.

குறிப்பாக ஒபாமா வருகைக்கு முன் தீவிரவாதிகள் நாச வேலை யில் ஈடுபடலாம். எனவே முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உளவு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன.

இதையடுத்து டில்லியில் பாது காப்பு நடவடிக்கைகளை தீவிரப்ப டுத்துமாறு டில்லி பொலிஸ் ஆணை யாளருக்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

இந்நிலையில் அவர் உயர் பொலிஸ் அதிகாரிகள் கூட் டத்தை கூட்டி டில்லியில் பாதுகாப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலு த்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனால் டில்லியில் மக்கள் கூடும் முக்கிய இடங்களான பாரா ளுமன்ற வளாகம், விமான நிலையம், ஜனாதிபதி மாளிகை அமை ந்துள்ள ரெய்ஸ்னா ஹில், இந்தியா கேட், மெட்ரோ புகையிரத  நிலைய ங்கள், வணிக வளாகங்கள், சினிமா கொம்ப்ளக்ஸ்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

இந்த இடங் களில் 24 மணி நேர கண்காணிப்பு போடப்படுகிறது என்பது குறிப்பி டத்தக்கது 

ad

ad