புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

ம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முதல்வர் ஒமர் அப்துல்லா தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளார்.
இதேபோல் துணை முதல்வரும் காங்கிரஸைச் சேர்ந்தவருமான தாரசந்த். சாம்ப் தொகுதியில் தோல்வியைத் தழுவுவது உறுதியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 87 தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் சோனாவர், பீர்வா ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் ஒமர் அப்துல்லா போட்டியிட்டார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சோனவர் தொகுதியில் ஒமர் அப்துல்லா பின் தங்கியே இருந்தார். தற்போதைய நிலையில் சோனவர் தொகுதியில் மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) வேட்பாளர் அஷ்ரப் 14,283 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஒமர் அப்துல்லாவோ 9,500 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். பி.டி.பி. வேட்பாளரை விட 4,783 வாக்குகள் வித்தியாசத்தில் ஒமர் பின் தங்கியுள்ளார். மற்றொரு தொகுதியான பீர்வாவில் சற்று முன்னர் 1,413 வாக்குகளில் ஒமர் அப்துல்லா முன்னிலையில் இருந்தார். ஆனால் இந்த தொகுதியிலும் ஒமர் தோல்வி முகத்தில் இருக்கிறார்.
இத்தொகுதியில் ஒமரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 20,192 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். ஒமர் அப்துல்லாவோ 19,968 வாக்குகள் பெற்று 1,224 வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். இதேபோல் அம்மாநில துணை முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரசந்த்தும் தோல்வியைத் தழுவுவது உறுதியாகி உள்ளது.
சாம்ப் தொகுதியில் போட்டியிட்ட தாராசந்த் 21,243 வாக்குகள்தான் பெற்றுள்ளார். அத்தொகுதியில் பாரதிய ஜனதாவின் வேட்பாளர் கிருஷ்ணன் லால் 36,033 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
பிரிவினைவாத தலைவர் சஜ்ஜன் லோன் வெற்றி முகம் மேலும் ஹண்ட்வாரா தொகுதியில் போட்டியிட்ட மக்கள் மாநாட்டு கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பிரிவினைவாத தலைவருமான சஜ்ஜத் லோன் முன்னணியில் இருக்கிறார். இவர் அண்மையில் பிரதமர் மோடியை பாராட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad