புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

வவுனியா மாவட்டத்தில் 32 ஆயிரத்து 736 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் 92 வீடுகள் முற்றாகவும் 282 வீடுகள் பகுதியளவிலும் சேதம்



வவுனியாவில் 9040 குடும்பங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 736 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதி க்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வெள்ள அனர்த்தம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 20 நலன்புரி நிலையங்களில் 504 குடும் பங்களை சேர்ந்த ஆயிரத்து 947 பேரும், செட்டிகுளம் பிரதேசசெயலகப்பிரிவில் 16 நலன்புரி நிலையங்களில் 649 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 416 பேருமாக 36 நலன்புரி நிலையங்களில் ஆயிரத்து 153 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 363 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதேவேளை வவுனியா பிரதேச செயல கப்பிரிவில் 5 ஆயிரத்து 762 குடும்பங்களை சேர்ந்த 21ஆயிரத்து 31 பேரும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 291 குடும்பங்களை சேர்ந்த 959 பேரும் வவு னியா தெற்கு பிரதேச செயலகப்பிரிவில் 625 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 222 பேரும் செட்டி குளம் பிரதேச செயலகப் பிரி வில் 2 ஆயிர த்து 362 குடு ம்பங்களை சேர் ந்த 8 ஆயிரத்து 524 பேரும் பாதிக்கப்பட்டு ள்ளனர் என வும் தெரிவித் தார்.

இதே வேளை 92 வீடு கள் முற் றாக சேதம டை ந்துள்ளதுடன் 282 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்ப ட்டுள்ளன.

இந்நிலையில் பாவற்குளத்தின் வான் கத வுகள் மேலும் திறக்கப்படவுள்ளமையி னால் கந்தசாமிநகர் மற்றும் கிறிஸ்தவகுளம் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ad

ad