புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2014

அரசாங்கத்தில் இருந்து 4 பேர் இன்று கட்சி மாறுவர்? - 10 நாட்களில் அரைவாசியினர் வந்துவிடுவர்!- மைத்திரி
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே நாளை அரசாங்கத்துக்கு இறுதி நாளாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையின் இணையத்தளம் ஒன்றுக்கு தகவல் தந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், இன்று நான்கு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது வேட்பாளர் தரப்புக்கு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று 2014ம் ஆண்டுக்காக இறுதி அமர்வை நடத்தவுள்ளது.
இந்தநிலையில் 13 ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்தரப்புக்கு மாறியுள்ளனர். எதிர்த்தரப்பில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க உட்பட்ட இருவர் அரசாங்கத் தரப்புக்கு சென்றுள்ளனர்.
ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் 150 பேரைக் கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கிறது.
இன்று இடம்பெறும் கட்சி மாறலை அடுத்து அது இல்லாமல் போய்விடும்.
இதேவேளை, களுத்துறையில் நேற்று உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அடுத்த பத்து நாட்களில் மேலும் பலர் தம்முடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் தேர்தலுக்கு முன்னர் ஆளும் கட்சியின் அரைவாசியினர் தம்முடன் இணைவர் என்று மைத்திரிபால குறிப்பிட்டார்.

ad

ad