புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2014

சங்கக்கார ஜொலிப்பு : இலங்கை வெற்றி
இங்கிலாந்தின் ஜேம்ஸ் ரெய்லர், அணித் தலைவர் ஒய்ன் மோர்கன் அசத்தலாக துடுப் பெடுத்தாடி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு உறுதுணை வழங்கிய போதிலும், இலங்கையின் சிரேஷ்ட வீரர்களான சங்கக்கார - ஜெயவர்த்தனவின் இணைப்பாட்டத்தை, அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் முடித்து வைக்க, இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபற்றுகிறது.

இரு அணிகளுக்கும் இடையில் நடை பெற்ற முதல் 3 போட்டிகளின் நிறைவில் இல ங்கை 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெற்றது.

இங்கிலாந்து அணியின் வழமையான அணித் தலைவர் குக் போட்டித் தடை காரணமாக பங்குபற்றாத நிலையில் ஒய்ன் மோர்கன் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கினார்.

போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத் தாடியது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு முற்பகுதியில் இளம் வீரர் ஜேம்ஸ் ரெய்லரின் துடுப்பாட்டமும் பிற்பகுதியில் அணித் தலைவர் மோர்கனின் துடுப்பாட்ட மும் கைகொடுக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 265 ஓட்டங்களை எடுத்தது.

துடுப்பாட்டத்தில் இளம் வீரர் ஜேம்ஸ் ரெய்லர் 90, அணித் தலைவர் ஒய்ன் மோர்கன் 62 (47பந். 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) ஓட்டங்களை எடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ஹேரத், டில்சான், மென்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

266 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இல ங்கை அணிக்கு நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார - மஹேல ஜெயவர்த்தன இணை 3ஆவது விக்கெட்டுக்காக பகிர்ந்த 96 ஓட்ட இணைப்பாட்டமும், மத்யூஸ் - திரிமன்னே இணை 5 ஆவது விக்கெட்டுக்காக பகிர்ந்த 53 ஓட்ட வெற்றி இணைப்பாட்டமும் கைகொடுக்க இலங்கை அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் சங்கக்கார 86, அணித் தலைவர் மத்யூஸ் ஆட்டமிழக்காமல் 51, மஹேல ஜெயவர்த்தன 44 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுக்களைக் கைப் பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சங்கக்கார தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் பல்லேகலேயில் ஆரம்பமாகிற
து

ad

ad