புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்: சாமியாரிடம் சிபிஐ விசாரணை

அரியானாவைத் தொடர்ந்து பஞ்சாபில் மற்றொரு சாமியார் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவரது ஆசிரமத்தில் உள்ள 400 ஆண் சீடர்களுக்கு வலுக்கட்டாய ஆண்மை நீக்கம் செய்ய வலியுறுத்தியது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரியானாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சாமியார் ராம்பால் கைது செய்யப்பட்டார். அவரது ஆசிரமத்தில் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், மருத்துவ உபகரணங்கள், கருவுற்றதை பரிசோதிக்கும் கருவி உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பஞ்சாப் மற்றும் அரியானாவில் தேரா சச்சா சவுதா என்ற பெயரில் ஆன்மிக இயக்கம் ஒன்றை நடத்தி வரும் மற்றொரு சாமியார் குர்மீத் ராம் ரஹீம் என்பவர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். 

இவரது ஆசிரமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சீடர்களாக இணைந்து தங்கி சேவை செய்து வருகின்றனர். இந்த இயக்கம் சார்பில் மருத்துவ சேவை, ஆன்மிக சேவை, சமூக சேவைக்காக அவ்வப்போது குர்மீத் ராம் ரஹீம் சிங் நிகழ்ச்சிகள் நடத்தியும் வருகிறார்.

இந்த சூழலில் அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த ஆண் சீடர்களுக்கு வலுக்கட்டாயமாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவரது முன்னாள் சீடர் ஹன்ஸ்ராஜ் சவுகான் என்பவர் அரியானா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என்னைப் போல பலருக்கும் அவரது ஆசிரமத்தில் கட்டாய ஆண்மை நீக்க சிகிச்சை செய்யப்பட்டது. 

ஆண்மை நீக்கம் செய்தால்தான் கடவுளை பார்க்க முடியும் என ஆசை வார்த்தை கூறி எங்களை மோசடி செய்துள்ளார். இது போல் 400 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த புகாரின் பேரில் ஹன்ஸ்ராஜூக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.   எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி கண்ணன் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சாமியார் குர்மீத் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று குர்மீத் மறுத்துள்ளார். 

இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் ஏற்கனவே சாமியார் குர்மீத் மீது பத்திரிக்கையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டது, பெண் சீடர் மீதான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad