புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2014

வன்முறையை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் யாழில் வாக்களிக்க 450,132 பேர் தகுதி
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் வடக்கிலும் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் இதன் போதான தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இம்முறை பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்னும் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் நீதியான நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் இதற்கமையவே பொலிஸாரின் செயற்பாடுகள் அமையும் என்றும் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தல் குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் மாவட்டத்தின் பாதுகாப்புக்கள் என்பன தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் உயர்மட்டக் கலந்து ரையாடலொன்று நேற்று முன்தினம் மதியம் இடம் பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் யாழ்.மாவட்டத்தில் 4லட்சத்து 50ஆயிரத்து 132பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு தெரிவி ப்பதற்கு 5 முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்துள்ளார்.   

ad

ad