புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2014

ஜோ ரூட் சதம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று நடந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சங்கக்கரா 91 ஓட்டங்களும், அணித்தலைவர் மேத்யூஸ் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 47 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பவுலர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.
பின்னர் பலத்த மழை கொட்டியதால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதையடுத்து விதிமுறைப்படி இந்த ஆட்டம் மாற்று நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதன்படி இன்று இங்கிலாந்து அணி 240 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அணித்தலைவர் குக் (20), மொயீன் அலி (4) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டெய்லர் (68), ரூட் அணியின் ஓட்டங்களை பொறுமையாக உயர்த்தினர். ரூட் சதம் விளாசினார். இது இவருக்கு 3வது சதமாகும். பின்னர் களமிறங்கிய போபாரா (28), மொர்கன் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றியடைச் செய்தார். இவர் 104 ஓட்டங்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி 49.1 ஓவரிலே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இலங்கை தரப்பில், சேனநாயகே 2 விக்கெட்டுகளையும், டில்ஷான், அஜந்த மெண்டிஸ், திசர பெரேரா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad