புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2014

போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து 11 தொழிற்சங்கங்கள் இன்று 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

கடந்த இரண்டு நாட்களாக குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. இன்றும் 3வது நாளாக தமிழகத்தில் குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இந்தநிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்தி அறிவித்துள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் 100 சதவிகித அகவிலைப்படியுடன், 7 சதவிகிதம் உயர்த்தி 107 சதவிகிதமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

ad

ad