புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2014

பெந்தர கங்கைக்கு அப்பால் பிறந்த நான் தப்பித்து செல்வேனா? ஜனவரி 8ம் திகதி இரவு விமான நிலையம் மூடப்படும்! மைத்திரிக்கு மஹிந்த பதிலடி
இலங்கை ஆசியாவில் புதிதாக கட்டியெழுப்பப்படும் நாடாக மாறியுள்ளதாக  எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரம் தற்போது மாற்றம் அடைந்துள்ளது. இந்த மாற்றத்துடன் உங்களது சமூகமும் மாற்றமடைய வேண்டும். இந்த நாடு வறிய நாடு அல்ல. ஆசியாவில் புதிதாக கட்டியெழுப்படும் நாடாக இலங்கை அமைந்துள்ளது.
இது தான் உண்மை. ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தலில் முன்வைப்பதற்கான வாசகம் இல்லை. வீதிகள், தண்ணீர், பாடசாலைகள் மற்றும் ஆய்வு கூடங்கள் செய்து தருவதாக கூற முடியுமா? முடியாது.
செய்ய முடியாமல் போன திட்டங்களுக்கும் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல்.
நாட்டு மக்கள் சிந்திக்காமல் வாக்களிக்க மாட்டார்கள். தப்பித்து சென்று விடுவார்கள் என விமான நிலையத்தை இரவு 12 மணிக்கு மூடுவார்களாம். பெந்தர கங்கைக்கு அப்பால் பிறந்த நான் தப்பித்து செல்வேனா?

ad

ad