புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2014

ஐகோர்ட் உத்தரவால் 9 ஓட்டல்களில் தலப்பாகட்டு, தலப்பாக்கட்டி வார்த்தைகள் நீக்கம்

திண்டுக்கல் தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி ஓட்டல் உரிமையாளர் நாகசாமி, சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மேற்கு மாம்பலத்தில் உள்ள திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி ஓட்டல், தி.நகர் கே.ஆர்.தலப்பாக்கட்டி பிரியாணி மற்றும் பாஸ்ட்புட் ஓட்டல், ஆர்.ஏ.புரம் மகாராஜா தலப்பாக்கட்டு ஓட்டல், அசோக்நகர் அருகே, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி ஓட்டல், திண்டுக்கல் ஹலால் தலப்பாக்கட்டு பிரியாணி மற்றும் பாஸ்ட்புட் சென்டர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தலப்பாக்கட்டு தலப்பாக்கட்டு பிரியாணி மற்றும் பாஸ்ட்புட் ஓட்டல், ஈக்காட்டுத்தாங்கல் தலப்பாக்கட்டு பிரியாணி,  அன்புராஜ் தலப்பாக்கட்டு, தி.நகரில் தலப்பாக்கட்டு பிரியாணி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை தலப்பாகட்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். 

இது கோர்ட்டு அவமதிப்பு செயலாகும். எனவே, இந்த 9 ஓட்டல்களின் உரிமையாளர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர்கள் 9 ஓட்டல்கள் அதிபர்களும் கோர்ட்டில் ஆஜராகி, தங்களது ஓட்டல் பெயரில் உள்ள தலப்பாக்கட்டு, தலப்பாக்கட்டி ஆகிய வார்த்தைகளை நீக்கி விடுவதாக உத்தரவாதம் அளித்தார்கள். மேலும், அது தொடர்பான பிரமாண மனுக்களையும் அவர்கள் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிபதி எஸ்.தமிழ்வாணன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஆர்.முத்து குமாரசாமி, வக்கீல் எஸ்.விஜயன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

ad

ad