புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2014

ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக்கிண்ணம் தரவரிசைப் பட்டியலில் சென்றலைட்ஸ் முதலிடம்


யாழ்.சென்றல் விளையாட்டுக் கழகம் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 வருடங்களாக நடத்தி வரும் யாழ்.நகரில் சிறந்த கழக அணித்தெரிவு நிகழ்வில் இவ்வருடம் (2014) சென்றலைட்ஸ் அணி 22 போட்டிகளில் பங்குபற்றி 19 போட்டிகளில் வெற்றி பெற்று 131.04 புள்ளிகளைப்பெற்று 1 ஆம் இடத்தை கைப்பற்றியது.

1 ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு மேற்படி வெற்றிக் கிண்ணமும் 10ஆயிரம் ரூபா பணப் பரிசிலும் வழங்கப்படும்.

கடந்த காலங் களில் 2010, 2011 ஆம் ஆண் களில் யாழ். பல்கலைக்கழக அணி யும் 2012 ஆம் ஆண்டு யாழ். ஜொனியன்ஸ் அணியும் 2013 ஆம் ஆண்டு கே.சீ.சீ.சீ அணியும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத் தக்கது.

இவ்வருட நிகழ்வில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றும் அணிகள் 2015 ஆம் ஆண்டு நடைபெற இருக் கும் முக்கோண போட்டிக்கு தகுதி யுடையவர்களாவர்.

இந் நிகழ்வின் தரவரிசை பட்டியல், 
சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 131.04 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும்  கே.சீ.சீ.சீ. விளை யாட்டுக்கழகம் 127.47 புள்ளிக ளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்  பற்றீசியன்ஸ் விளையாட்டுக்கழகம் 85.40 புள்ளிகளைப் பெற்று மூன் றாமிடத்தையும்  யாழ்.பல்கலைக்க ழகம் 72.26 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும் யாழ்.மத்திய விளையாட்டுக்கழகம் 69.95    புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தையும்  மானிப்பாய் பரீஸ் விளையாட் டுக்கழகம் 60.82 புள்ளிகளைப் பெற்று ஆறாமிடத்தையும் ஸ்ரீ காமாட்சி  விளையாட்டுக் கழகம் 60.76 புள்ளி களைப் பெற்று எழாமிடத்தையும் கிறாஸ் கோப்பர்ஸ் விளையாட்டுக் கழகம் 60.43 புள்ளிகளைப் பெற்று எட்டாமிடத்தையும் ஜூனியன்ஸ்  விளை யாட்டுக்கழகம் 47.63 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாமிடத்தையும் யாழ். ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் 44.65 புள்ளிகளைப் பெற்று பத்தா மிடத்தையும் ஜொலி ஸ்ரார் விளை யாட்டுக்கழகம் 43.95 புள்ளிகளைப் பெற்று பதினொராமிடத்தையும்  திரு நெல்வேலி கிரிக்கெட்கழகம் 38.41 புள்ளிகளைப் பெற்று பன்னிரண் டாமிடத்தையும் ஸ்கந்தாஸ்ரார்ஸ்  விளையாட்டுக்கழகம் 33.15 புள்ளி களைப் பெற்று பதின்மூன்றாமிடத் தையும்  ஓல் கோட்ஸ் விளை யாட் டுக்கழகம் 25.93 புள்ளிகளைப் பெற்று பதின்னான்காமிடத்தையும் அரி யாலை மத்திய விளையாட்டுக் கழகம் 24.46 புள்ளிகளைப் பெற்று பதினைந்தாம் இடத்தையும் பெற் றுக் கொண்டது.     

ad

ad