புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

காஷ்மீர்- ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முன்னணி நிலவரம்
சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜம்மு-காஷ்மீரில்  மக்கள் ஜனநாயக கட்சியும் , ஜார்க்கண்டில் பாஜகவும் முன்னிலைப் பெற்றுள்ளன. 

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்தப்பாதுகாப்புடன் தொடங்கியது. ஆளும் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக, காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவும் காஷ்மீரில் 28 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தீவிரவாதிகளின் எச்சரிக்கையும் மீறி 1987-ம் ஆண்டு பின்னர் முதல்முறையாக 65 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதால் எந்த கட்சிக்கு பெருபான்மை என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜார்கண்ட் முன்னிலை நிலவரம்: (81 தொகுதிகள்)

பா.ஜ.க-37, ஜே.எம்.எம்-22, காங்கிரஸ்-10, ஜே.வி.எம்-8

காஷ்மீர் முன்னிலை நிலவரம்: (87 தொகுதிகள்)

பி.டி.பி-26, பா.ஜ.க-24, என்.சி-12, காங்கிரஸ்-17 

ad

ad