புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2014

வைத்தியரை இடமாற்றம் செய்ய முற்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா, பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியரை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்ய முற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் பாவற்குளம் பிரதேச வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கருத்து தெரிவிக் கையில்.

பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அவை மிகவும் மோசமாகவுள்ள தாகவும் கட்டுமானத்தில் பல தவறுகள் உள்ளதாகவும் பிரதேசவாசிகள் அண்மையில் வைத்தியருக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து வைத்தியர் ஒப்பந்தகாரர்களிடம் வேலைகள் சீரில்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஒப்பந்தகாரர் வைத்தியரை தாக்க முற்பட்டிருந்த போது சிகிச்சைக்காக சென்றிருந்தவர்கள் அதனை தடுத்திருந்தனர்.

எனினும் கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு வருகை தந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒப்பந்தகாரர்களுக்கு சார்பாக செயற்பட்டுள்ளார்.

இரவு-பகல் பாராது மக்களுக்கு சேவையாற்றும் வைத்தியரை பாடசாலை ஆசிரியர் மாணவனை வகுப்பறைக்கு வெளியில் விடுவது போல் வைத்தியசாலைக்கு வெளியே விட்டு வைத்தியரின் அறையை பூட்டி அராஜகம் செய்துள்ளார்.

எனினும் பிரதேசவாசிகள் உடன் வைத்தியசாலைக்கு வந்து வைத்தியரை அவரது கடமையை செய்ய விடுமாறு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரை கோரியி ருந்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்தும் எமது வைத்தியசாலையின் வைத்தியரை இடமாற்றம் செய்வதற்கும் ஒப்பந்தகாரர்களுக்கு சார்பாக செயற்படவும் அதிகாரிகள்
முனைகின்றனர். அதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம் என தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பணி செய்யும் வைத்தியரை இடமாற்றம் செய்யாதே, மூவின மக்களுக்கும் சேவை செய்யும் வைத்தியரை அவமானப்படுத் தாதே, ஒப்பந்தகாரரே உங்கள் பணியை சீராக செய், சுகாதார அமைச்சரே வைத்திய சாலையின் தரம் உயர்த்து என்ற சுலோகங்களை தாங்கியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியிருந்தன
ர்

ad

ad