புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

வேட்பாளர் கடத்தப்பட்டார் என்று கலாட்டா : மேற்கு மாவட்ட திமுக தேர்தல் நிறுத்திவைப்பு : கலைஞர் பேச்சுவார்த்தை

திமுக நிர்வாகிகள் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.  அண்ணா அறிவாலயம் ராயபுரம் அறிவகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நடைபெற்றது.  

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் போட்டியிட்டார்.  இவருக்கு எதிராக இளந்தொழிலதிபரும், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான 30 வயது செந்தில்முருகன் களமிறங்கினார்.  

குமரி கிழக்கு வாக்கு எண்ணிக்கையில் அதிக டென்ஷன் இருந்தது. கடைசி நிமிடம் வரை இந்த டென்ஷன் நீட்டித்தது.  கடைசியில் சுரேஷ்ராஜன் வெற்றி என அறிவிக்கப்பட்டார்.

கடந்த முறை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் சுரேஷ்ராஜனை எதிர்த்துப்போட்டியிட்ட கிள்ளியூர் ஒ.செ. மனோ தங்கராஜ் இம்முறை கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் போட்டியிட்டார்.  

இவரை எதிர்த்து தனது ஆதரவாளர் பொன்ஜீவராஜை நிறுத்தினார் சுரேஷ்ராஜன்.   மனோ தங்கராஜூக்குத்தான் வாய்ப்புகள் அதிகம் என்ற நிலை இருந்தது.  இந்நிலையில்,  இன்று தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், திடீரென்று வாக்குப்பெட்டியை கைப்பற்றிய சுரேஷ்ராஜன்,  ‘’ எனது வேட்பாளர் பொன் ஜீவராஜை காணவில்லை.  எதிர்தரப்பினர் கடத்திச்சென்றுவிட்டனர்.  ஆகவே தேர்தலை நிறுத்த வேண்டும் என்று கலாட்டா செய்தார்.  

தோல்வி பயத்தினால்தான் இப்படி சுரேஷ்ராஜன் நாடகமாடுகிறார் என்று எதிர்தரப்பினர் கூச்சலிட்டனர்.  இதனால் அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  வேறு வழியின்றி இந்த பகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இரு தரப்பினரையும் அழைத்து திமுக தலைவர் கலைஞர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.  தனது முன்னிலையில் இந்த பகுதிக்கு தேர்தல் நடைபெறட்டும் என்று ஆலோசனை கூறி வருகிறார்.

ad

ad