புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

கர்தினாலின் ஆதரவு மஹிந்தவுக்கா? மருமகளின் ராஜதந்திர பதவிக்கான நன்றிக் கடனா?


கொழும்பின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிடலாம்
என்று இணையத்தளம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கர்தினாலின் மருமகள் ஒருவர், பாரிஸில் உள்ள இலங்கை தூதரகத்தில் இரண்டாம்நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமையை கொண்டே இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கர்தினாலின் மருமகளான ருவணி குரே, வெளிநாட்டு சேவையில் எவ்வித பரீட்சைகளுக்கும் தோற்றாத நிலையில் பாரிஸ் தூதரத்தில் இரண்டாம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ருவணி குரே, மணிலாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றினார்.
இதன்பின்னர் பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருவதற்கான ஒழுங்குகளை செய்த நிலையில் ருவணிக்கு பாரிஸில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாப்பரசரின் இலங்கை விஜயமானது, கிறிஸ்தவர்கள் மீது இனவாதிகளின் தாககுதல்களால் அரசாங்கம் இழந்துள்ள கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தி என்று கருதப்படுகிறது.
இதனை கருத்திற் கொண்டே சாதாரணமாக தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டு இரண்டு மாதக்காலப் பகுதிக்குள் நாடு ஒன்றுக்கு பாப்பரசர் விஜயம் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டையும் புறந்தள்ளி, அவரை இலங்கைக்கு வரவழைக்கும் உறுதிமொழியை கர்தினால், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுக்கு வழங்கினார் என்று கொழும்பு இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

ad

ad