புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2014

மாற்றித்திறனாளிகள் நலத்திட்ட விழாவில் கலைஞர் ஆற்றிய உரை
மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுக தலைவர் கலைஞர் உரையாற்றினார்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கி வாழ்த்துரை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கலைஞர் இந்த ஆண்டும்,உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (3.12.2014) காலை தனது இல்லத்தில், திராவிட மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் மற்றும் தமிழ் நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பில் நல உதவிகள் வழங்கிட வருகை தந்ததும், அங்கே நலஉதவிகள் பெற்றிட குழுமியிருந்த ஏராளமானோர் “மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலர் தலைவர் கலைஞர் வாழ்க, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வாழ்க! தமிழினத் தலைவர் கலைஞர் வாழ்க!” என்றும் “தளபதி மு.க.ஸ்டாலின் வாழ்க!” என்றும் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.

நல உதவிகள் வழங்க வருகை தந்த தலைவர் கலைஞரை திராவிட மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் திருத்தணி எஸ்.எஸ்.ஜோதி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் ரெ.தங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர்.

அவர்களின் அன்பான வரவேற்பினை ஏற்றுக் கொண்ட கலைஞர் , திராவிட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில், தையல் இயந்திரம், வேட்டி,சேலை, இனிப்பு மற்றும் ஊன்று கோல், கருப்புக் கண்ணாடி உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார்.

திமுக தலைவர் கலைஞர்  மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கி ஆற்றிய வாழ்த்துரை வருமாறு:-  ’’மாற்றுத் திறனாளிகள் இங்கே வருகை தந்து இங்கே வழங்கப்படுகின்ற இந்த பரிசுப் பொருட்களை பெற்றமைக்காக - வருகை தந்த மாற்றுத்திறனாளிகள், பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் ஊன முற்றோர் என்ற பெயர் மாற்றப்பட்டு, “மாற்றுத் திறனாளி” - என்ற பெயர் சூட்டப்பட்டு(பலத்த கைத்தட்டல்) பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, இன்றளவும், தமிழகத்திலே மாத்திரமல்லாமல் இந்தியா முழுமையும் மாற்றுத் திறனாளிகள் நலம் பயக்கும் திட்டங்கள் பலவற்றை ஆங்காங்குள்ள மாநில அரசுகளின் பெயரால் நடத்தப் பட்டுகின்றன.

 அந்த வகையில் அடையாளமாக - அடையாளப்பூர்வமாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெயர் சூட்டப்பட்ட மாற்றுத் திறனாளிகள் திட்டத்தின் அடிப்படையில் இன்றைதினம் இங்கே அவர்களுக்கு பரிசுப் பொருட்கள்- அவர்களுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் இவைகளை வழங்குகின்ற இந்த பெரு முயற்சியிலே நானும் பங்கேற்று இதை வழங்குவதில் பெருமைப்படுகின்றேன். 

அதைப் பெற்றுள்ள பெருமக்கள், அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த உதவிகளை ஒரு நன்றியு ணர்வோடு அனுபவித்து அதே உணர்வோடு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு என்னுடைய வாழ்த்துரையை இந்த அளவில் நிறைவு செய்கின்றேன்.’’


இதைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின்  மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவி களை வழங்கிட அதனை மாற்றுத் திறனாளிகள் அன்புடன் பெற்றுக் கொண்டனர்.

ad

ad