புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2014

முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்: அரசாங்கம் - தனியான முஸ்லிம் மாவட்டத்துக்கு ரணில், மைத்திரி உடன்பாடு இல்லை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் சீரான முறையில் இடம்பெறுகின்றன.
ஏற்கனவே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தநிலையில் அந்தக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதில் தொடர்பில் தீர்மானிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது கிழக்கு மாகாணசபை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை அரசாங்கத்தில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகிச் சென்றமை குறித்து அரசாங்கம் கவலையடைவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக்கருத்துக்களை குறிப்பிட்டார்.
தனியான முஸ்லிம் மாவட்டத்துக்கு ரணில், மைத்திரி உடன்பாடு இல்லை
ஸ்ரீலங்கா முஸ்லி;ம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ள கிழக்கின் முஸ்லிம் தனிமாவட்ட கொள்கையை ரணில் விக்கிரமசிங்கவும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நிராகரித்துள்ளனர்.
இந்த செய்தியை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கு ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதியளித்துள்ளதாக குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணக்கத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad