புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

பாதர் பிரான்சிஸ்சுடன் எனது கணவரும் சரணடைந்தார்; தளபதி இராகுலனின் மனைவி சாட்சியம் 
வட்டுவாகலில் பாதிரியார் பிரான்சிஸ்சுடன் இராணுவத்திடம் சரணடைந்த எனது கணவரை இன்று வரை காணவில்லை என இம்ரான்பாண்டியன்
அணியின் தளபதி இராகுலனின் மனைவி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.



யுத்தத்திலும் முடிவின்பின்னரும், சரணடைந்தும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. அதன்போதே இராகுலனின் மனைவி இவ்வாறு சாட்சியமளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எனது கணவரான ரூபன் அவரது நண்பருடன் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வட்டுவாய்க்காலில் சரணடைந்தார்.

கணவர் விடுதலைப்புலிகள்  இயக்கத்தில் 'இம்ரான்பாண்டியன்' அணியின் தளபதியாக இருந்தவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் இராகுலன் என அழைப்பார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் இராணுவத்தினரிடம் சரணடையுமாறு ஒலிபெருக்கிமூலம் அறிவித்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது பாதிரியார் பிரான்சிஸ்சுடன் எனது கணவர் உள்ளிட்ட முக்கிய போராளிகள் 2009.05.18ஆம் திகதி  இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.

இதனை எங்களது நண்பர்கள் பலர்  தெரிவித்திருந்தனர். எனினும்  நாங்கள் 16ஆம் திகதி இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டோம் .இவ்வாறு சரணடைந்தவர்கள் தான் இதுவரை எங்கிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

மனித உரிமைகள் ஆணைக்குழு, செஞ்சிலுவை சங்கம் மற்றும் பொலிஸ் என எல்லா இடமும் அறிவித்தோம் பதில் எதுகும் இல்லை. 


பிள்ளைகளும் படிக்கச்செல்வதால் மிகவும் கஸ்ரம் தான் .இருந்த நகையெல்லாத்தையும் விற்று சாப்பிட்டுவிட்டு தற்போது மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றோம்.  எனது கணவர் உயிருடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.

ad

ad