புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2014

யாழிலிருந்து காங்கேசன்துறைக்கு இன்று பரீட்சார்த்த ரயில் சேவை


யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று இடம்பெற்றது.
 
இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை இன்ரசிற்றி கடுகதி ரயில் பரீட்சார்த்த சேவையினை மேற்கொண்டுள்ளது. 
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  ஏற்பாட்டில் ரயில்சேவை இன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எதிர்வரும் 2 ஆம் திகதி காங்கேசன்துறைக்கான ரயில் சேவையினை ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இன்று பரீட்சார்த்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ad

ad