புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014



பிலிப் ஹியூக்ஸ் உடல் அடக்கம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
‘பவுன்சர்’ பந்து தாக்கி மரணமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. 

வீரர்கள், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிட்னியில் நடந்த உள்ர் போட்டியில், சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’ பந்து தாக்கி யதில் காயமடைந்த அவுஸ்தி ரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 27இல் மரணமடை ந்தார். 

இவரது உடல், சொந்த ஊரான மேக்ஸ்விலியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதற்கான இறுதி அஞ்சலி இங்குள்ள உயர்நிலை பள்ளியில் நடந்தது. இங்கு ஹியூக்ஸின் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. 

கூட்டத்தில் அவுஸ்திரேலிய அணி கப்டன் கிளார்க், பின்ச் உள்ளிட்ட வீரர்கள் பங்கே ற்றனர். இந்திய அணியின் விராத் கோலி, ரோகித், ரவி சாஸ்திரி, பிளட்சர் கலந்து கொண்டனர். 

வெஸ்ட் மேற் கிந்தியத்தீவு லாரா, நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீயும் பங்கேற்றனர். தவிர, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் மற்றும் ஹியூக்ஸின் நெருங்கிய நண்பர்களும் வந்தனர். இறுதி அஞ்சலியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் அமர்ந்திருந்த ஹியூக்ஸின் தந்தை கிரெ ய்க், தாயார் விர்ஜினியா அழுதே கொண்டே இருந்தனர். 

வார்னர், மிட்சல் ஜான்சன், பின்ச் உள்ளிட்டவர்களும் கண்ணீர் வழியும் முகத்துடன் அமர்ந்திருந்தனர். பேசுவதற் காக வந்த ஹியூக்ஸின் சகோதரர் ஜேசன், சகோதரி மேகன் அழுதனர். 

இதன் பின் பேசிய கப்டன் கிளார்க், ஹியூக்ஸ், உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஒரு கட்டத்தில் துக்கம் தாங்காமல் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

இதன் பின் ஹியூக்ஸின் சவப் பெட்டியை தந்தை கிரெய்க், அவுஸ்திரேலிய கப்டன் கிளா ர்க், ஆரோன் பின்ச் உள்ளிட் டோர் தூக்கி சென்றனர்.

பின், வெளியில் இருந்த வாகனத்தில் வைக்கப்பட்ட ஹியூகஸின் சவப்பெட்டிக்கு பலர் அஞ்சலி செலுத்தினர். இதன்பின், சாலையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 

வீரர்கள், ரசிகர்கள் பின் தொடர்ந்தனர். வீதியின் இருபுறமும் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, ஹியூக்ஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

இறுதி அஞ்சலி கூட்டம் நடந்த இடத்தில் பிலிப் ஹியூக்ஸின் படங்கள் வைக்கப்பட்டி ருந்தன. 

தவிர, இவர் போட்டிகளில் பயன்படுத்திய மூன்று விதமான தொப்பிகளும் வைக் கப்பட்டிருந்தன. 

ஹியூக்ஸின் இறுதி அஞ்சலி கூட்டம், சிட்னி, அடி லெய்டு மைதானத்தில் பெரிய திரையில் நேரடி ஒளி பரப்பு செய்யப்பட்டது.         

ad

ad