புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

நீதிமன்றம் பிடியாணை உத்தரவு! பகிரங்கமாக சிங்கப்பூர் சென்ற பிரதி அமைச்சர்


நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் ஒருவர் இன்று நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகமவே இவ்வாறு நாட்டைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை தான் நாட்டிலிருந்து செல்வதாக ஊடகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசேட அறிவித்தலொன்றை விடுத்து விட்டே அவர் செ
ன்றுள்ளதாக சிங்கள ஊடகங்கள் பல தெரிவித்துள்ளன.
பொலிஸ் பொறுப்பிலிருந்த இவரது ஆதரவாளர்கள் மூவரை பலாத்காரமாக விடுவித்துச் சென்றமை குறித்து இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் பகிரங்கமாக சிங்கப்பூருக்கு சென்றார்!
காலி பத்தேகம நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம இன்று அதிகாலை பகிரங்கமாக சிங்கப்பூருக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்தநிலையில் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
எனினும் நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவின் அடிப்படையில் அவரை கைதுசெய்ய அதிகாரிகள் முயற்சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாம் மீண்டும் இலங்கைக்கு திரும்பி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாகவும் முத்துஹெட்டிகம ஊடகம் ஒன்றுக்கு விமான நிலையத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளார்.
காலியில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மேடை உடைப்பு சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட இருவரை பொலிஸ் நிலையத்தில் இருந்து பலாத்காரமாக நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்றமை தொடர்பிலேயே அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் வெளிநாடு சென்றமையானது இலங்கையின் பொலிஸ் மற்றும் நீதித்துறை அரசாங்கத்தின் ஆணை அடிப்படையிலேயே இயங்குவதை எடுததுக்காட்டுகிறது.

ad

ad