புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2014

முதலமைச்சராகும் அனைத்து தகுதியும் எனக்கு உள்ளது: நான் ஆசைப்பட கூடாதா? திருநாவுக்கரசர் பேட்டி




காங்கிரஸ் கட்சியின் 130ம் ஆண்டு தொடக்க விழா புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் 

காங்கிரஸ் கட்சியின் 130வது ஆண்டு தொடக்கவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றத்தந்ததனர். மேலும் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக வளர்வதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். 

பாஜகவிற்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள பெரிய தொழிலதிபர்களின் பணத்துணையோடு தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமராக ஆகியுள்ளார். ஆனால் அவர் ஆட்சி பொறுப்பேற்று 200 நாட்கள் ஆகியும் இதுநாள் வரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து செயல்படுவதற்கும் நாட்டிற்கு பிரதமராக இருப்பதற்கும் என்ன சிரமம் இருக்கும் என்பதை இப்போது மோடி நன்கு உணர்ந்திருப்பார். 

மோடி வெளிநாடு வாழ் இந்தியராக தான் உள்ளாரே தவிர இந்தியாவின் பிரதமராக அவர் இல்லை. 5 ஆண்டு திட்டத்தை உருவாக்கி இந்தியாவை வளர்ச்சி பாதையில் செலத்திய திட்டக்குழுவை கலைத்து விட்டு மற்றொரு அமைப்பு அமைக்க போவதாக அறிவித்துள்ளனர். மற்றொரு அமைப்பு ஏற்பட்டால் என்ன மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்பது தெரியவில்லை 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டிற்கு மேல் உள்ளது. தற்போது தலையான பணியாக இருப்பது காங்கிரஸ் கட்சியை பலபடுத்த வேண்டும். அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தான். ஒவ்வொரு கட்சியும் அவர்களின் கட்சியை பலப்படுத்துவதை தான் செய்து கொண்டுள்ளனர். 

பொதுத்தேர்தலின் போது மோடிக்கு அளிக்கப்பட்ட விளம்பரம் முக்கியத்துவம் இன்னமும் மக்கள் மனதில் தங்கியுள்ளது. இதுதான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம். இதுவிரைவில் மாறும். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அதிகாரிகள் அமைச்சர்கள் அவர்களை அழைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். 

தமிழக முதல்வராக ஆக யார் யாரோ ஆசைப்படும் போது நான் ஆசைப்பட கூடாதா? கலைஞர் மற்றும் அன்பழகனுக்கு அடுத்த படியாக அதிக முறை எம்எல்ஏ மட்டுமல்லாது எம்பியாகவும் இருந்தவன் என்ற முறையில் எனக்கும் முதல்வராவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது. 

பாஜக சம்பந்தப்பட்ட சங்பரிவார் இந்து முன்னனி விஎச்பி ஆகியவை தொடர்ந்து மதமாற்றம் செய்வதிலேயும் நாட்டை பிளவு படுத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இது பாஜகவிற்கு பெருத்த பின்னடைவை தான் ஏற்படுத்தும். இவைகளை தடை செய்வது குறித்து நான் கருத்து கூறமுடியாது. கட்சியின் தலைமை தான் கருத்து கூறமுடியும். கோட்சேவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது. 

தமிழக அரசை பொறுத்த வரை இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைப்பதற்கு  முன் மற்றும் அதற்கு பின்னர் என்று பிரித்து கொள்ள வேண்டும். அவர் தன்டனை பெற்ற பிறகு நடக்கும் ஆட்சி என்பது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. மக்களை சந்திக்கும் முதல்வராக ஓபிஎஸ்  ஆக வேண்டும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அளித்திருப்பது மிகவும் பாரட்டக்குறிய செயலாகும். அவர் அந்த விருதிற்கு மிகவும் பொறுத்தமானவர். வாஜ்பாயோடு மோடியை ஒப்பிடுவது என்பது முடியாத காரியம் என்றார்

ad

ad