புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

போடோ தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க ஆபரேசன் ஆல் அவுட்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்க

 தாக்குதல் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் 8 ஆயிரம் வீரர்கள் ஈடுபட உள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலத்தில், போடோ தீவிரவாதிகளை ஒழிப்பது குறித்து ராணுவ தலைமை தளபதி ஜெனரல் கல்பீர் சிங் சுஹாக் உடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது 3 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. 

இதுதொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ஜெனரல் கல்பீர் சிங் சுஹாக், அருணாச்சலப்பிரதேசம், பூட்டான், மேகாலயா எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிப்பது, பூட்டான் நாட்டின் ராணுவத்துடன் இணைந்து போடோ தீவிரவாதிகளை ஒழிப்பது, மியான்மர் நாட்டில் செயல்படும் 3 தீவிரவாத முகாம்களை அழிக்க அந்நாட்டுடன் ராஜாங்க ரீதியிலான அணுகுமுறை ஆகிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து போடோ தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க ஆபரேசன் ஆல் அவுட் என்ற தாக்குதல் நடவடிக்கையை அசாம் மாநிலம சோனித்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையில் 8 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுகுறித்து சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரத்தில் அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்து போடோ தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 79 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து போடோ தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. 

ஹெலிகாப்டர் மூலமும் வேட்டை நடக்கிறது. இதில் கடும் துப்பாக்கி சண்டை நடப்பதாகவும், கையெறி குண்டுகள் வீசப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதல் பணிக்கு சீனா, மியான்மர் மற்றும் பூடான் நாட்டின் ஆதரவையும் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

போடோ தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க ஆபரேசன் ஆல் அவுட் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் 8 ஆயிரம் வீரர்கள் ஈடுபட உள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ad

ad