புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2014


ராணுவம் எங்கள் குடும்பத்தை தாக்கியதை உணர்த்தவேராணுவம் நடத்தும் பள்ளியை தாக்கினோம்: தலிபான் தீவிரவாதி
பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தும்  பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை சிறைப்பிடித்தனர். தீவிரவாதிகளிடமிருந்து மாணவர்களை விடுவிக்க அந்நாட்டு ராணுவம், தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. 

தீவிரவாதிகள்- ராணுவம் இடையே நிகழ்ந்த பயங்கர மோதலில் குழந்தைகள் உள்பட 125 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 85-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த தீவிரவாதிகள் அனைவரும் பிரதான நுழைவு வாயிலில் உள்ளே நுழைந்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் ராணுவத்தின் சீருடை அணிந்து கொண்டு பள்ளியின் வளாகத்தில் புகுந்துள்ளனர். தீவிரவாதிகள் 3 பேரை ராணுவத்தினர் சுட்டுகொன்றுவிட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் தாக்குதல் முழுவதும் ராணுவத்தினர் மீது மட்டுமே தவிர அப்பாவி குழந்தைகள் மீது அல்ல என்கிற தகவல்களை தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு செய்திதொடர்பாளர் முகமதுவூர்க் கோரிசானி தெரிவித்துள்ளார். ராணுவம் எங்களின் குடும்பத்தை தாக்கியது. அந்த வலியை ராணுவத்தினற்கு உணர்த்தவே பள்ளியை தாக்கினோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெஷாவர் தாக்குதலுக்கு நாவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விசாரணையை தானே முன்னின்று விசாரிக்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். மேலும் அவர்கள் என் குழந்தைகள்,அவர்களின் மரணம் என்னுடைய இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad