புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2014

நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராவர்: மதுரை ஆதீனம்


நீதி மன்ற வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் தமிழகமுதல்வராவர் என மதுரை ஆதீனம் கூறினார்.கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர்.27வது
நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் சிவகாசியில் சனிக்பொதுவாக நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்து சமையத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாரியவர்கள்தான் உள்ளார்கள்.மீண்டும் அவர்கள் தாய்கழகத்தில் இணைவதுபோல இந்து மதத்தில் விரும்பியவர்கள் சேரலாம்.ஜெயலலிதா முன்பு மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தார்.அதற்கு கிறிஸ்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது.எனவே மத்திய அரசின் மதமாற்ற தடை சட்டம் பெரும் பிரச்சனையாகாது.
உண்மை தூங்காது.ஜெயலலிதா நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராவர். மேலும் 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி துணிவேடும், தெளிவோடும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.திருஞானசம்பந்தருக்கு மங்கையர்கரசி உறுதுணையாக இருந்தார்.அதுபோல ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சிறப்பாக ஆட்சி செய்தார்.தற்போதும் தமிழக மக்களை வழிநடத்தி செல்கிறார்.
சிறப்பான ஆட்சியாகவும், மக்களுக்குத் தேவையான ஆட்சியாகவும் இருப்பதால்தாலும், ஜெயலலிதா உறுதியாக முடிவு எடுப்பதாலும், நான் அதிமுக ஆட்சிக்கும் ஜெயலலிதாவிற்கும் உறுதுணையாக  நான் உள்ளேன் என்றார் மதுரை ஆதீனம்.

ad

ad