புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2014

மைத்திரி அலையால் மகிந்தவிற்கான ஆதரவு சடுதியாக வீழ்ச்சி 
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்காளர்களிடம் வேட்பாளர்களின் நடத்தை குறித்து மேற்கொள்ளப்பட்ட சில கருத்து கணிப்புக்களில் பொது
வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு இருக்கும் மக்களின் வரவேற்பு சடுதியாக அதிகரித்து வருவதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கான வரவேற்கு குறைந்து வருகிறது.
இன்று வெளியாகியுள்ள ராவய பத்திரிகை தனது பிரதான தலைப்புச் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்ன பொது வேட்பாளருக்கு சாதகமான நிலைமை பிரதான நகர் புறங்களிலும் ஏனைய நகர பகுதிகளில் மாத்திரமே காணப்பட்டது.
கிராம புறங்களில் ஜனாதிபதி மகி்ந்த ராஜபக்ஷவுக்கே கூடுதல் ஆதரவு இருந்து வந்தது.
எனினும் அடுத்த மூன்று தினங்களில் மைத்திரிபால அலை பரவியதை தொடர்ந்து கிராம புறங்களில் ஜனாதிபதிக்கான ஆதரவு சடுதியாக குறைந்து போனது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்காக தேர்தல் பிரசாரங்களோ, துண்டுப் பிரசுரங்களோ விநியோகிக்கப்படாத சூழலிலும் இலத்திரனியில் ஊடகங்களில் பெரும்பாலான ஊடகங்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலைமையில் இந்த மாற்றம் ஏற்பட்டது.
ஜனாதிபதியின் பிரசாரங்களில் கலந்து கொள்ளும் மக்களில் பெரும்பாலானவர்கள் வெளி பிரதேசங்களில் இருந்து பஸ்களில் அழைத்து வரப்படுபவர்கள் என்பதை மக்கள் அடையாளம் கண்டுக்கொண்டு விட்டனர்.
பாரிய பிரசார முன்னெடுப்புகள் இல்லாத நிலைமையிலும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்கின்றனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனதிபதி மக்களுக்கு பெருமளவில் நிவாரணங்களை வழங்கியுள்ள போதிலும் அது எதுவும் ஜனாதிபதிக்கான ஆதரவை வலுப்படுத்த காரணமாக அமையவில்லை என்பதை காண முடிகிறது.
அத்துடன் ஜனாதிபதியின் எந்த தேர்தலுக்கு செலவிடாத வகையில் தற்போது அதிகளவில் பணம் செலவிடப்படுவது குறித்தும் மக்கள் எதிர்ப்புகளை கொண்டிருப்பது முக்கியமான விடயமாகும்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்துள்ள இந்த மக்கள் ஆதரவை தக்கவைத்து கொள்ள முடிந்தால், ஜனாதிபதியின் தேர்தல் பிரசார இயந்திரம் வீழ்ச்சியடைந்து தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, பெருவாரியான வெற்றியை பெறுவார் என்பதை காணக்கூடியதாக இருப்பதாக ராவய தெரிவித்துள்ளது.
2015 ஜனாதிபதித் தேர்தல்! மகிந்தவா? மைத்திரியா? நீங்களும் வாக்களிக்கலாம்
இலங்கையில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.
அந்த வகையில் லங்காசிறி இணையத்தளமானது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெடுப்பொன்றினை நடாத்துகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமாக களமிறக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரில் யார் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்கள்.
வாசகர்கள் தங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்யமுடியும். கருத்து கணிப்பில் கலந்து கொண்ட பின்னர் முடிவுகள் உடனடியாக கலந்து கொண்டவருக்கு காண்பிக்கப்படும்
இந்த வாக்கெடுப்பில், இலங்கையில் உள்ள  வாசகர்களிடமிருந்தே அதிக பதில்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ( 90 வீதமான பதில்கள்) ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து 10 வீதமே எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முடிவுகள் 07.01.2015 அன்று வெளியிடப்படும். அத்துடன் முடிவுகளை எவரும் பார்க்க முடியும். கருத்து கணிப்பு நடத்தப்படும் இணையத்தளம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஒருதடவையே வாக்களிக்க முடியும். (Thank you for voting!) இரண்டாவது தடவை வாக்களிக்க முற்பட்டால் “Thank you, we have already counted your vote” இவ்வாறு ஆங்கிலத்தில் பதில் வரும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
Presidential Election Sri Lanka 2015 - 

ad

ad