புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

த.தே.கூட்டமைப்புடன் மைத்திரி வெற்றுக் காகிதத்தில் கைச்சாத்து

தமிழ் ஈழக்கனவு இன்னும் கைவிடப்படவில்லை பெறுவதற்கான வடிவங்களிலேயே வேறுபாடு
பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன தலைமையிலான எதிரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமி ட்டுள்ளது. அப்படியானால் மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கவும்
வடக்கிற்கு பொலிஸ் அதிகாரத்தை பெற்றுத்தரவும் இணங்கியுள்ளாரா? என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று கேள்வி எழுப்பினார்.
தமிழ் ஈழத்தைக் கைப்பற்றுவத ற்கான கனவு இன்னமும் கைவிடப்படவில்லை. அதனை பெற்றுக்கொள்வதற்கான வடிவங்கள்தான் வேறுபட்டுள்ளன என்றும் அமைச்சர் ஜீ.எல். தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டு மென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான குறிக்கோளாகும். இதற்கான அழுத்தத்தை புலி டயஸ்போரா கூட்டமைப்பிற்கு வழங்கி வருவது, விடுதலைப் புலிகள் ஆதரவாளரான சுரேன் சுரேந்திரனே சர்வதேச தொலைக்காட்சியொன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் இவர்களின் பலம் வேண்டுமென்பதற்காகவே எதிரணியினர் கூட்டமைப்பினர் தீட்டிய வெற்றுக் கடதாசியில் கையொப்பமிட் டுள்ளனர். ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக திரட்டிய சாட்சியங்கள் போதாமை காரணமாக சாட்சியம் பெறும் கால வரையறையை நீடித்துள்ளமை அனைத்தும் ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளின் விளைவுகளேயெனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை யகத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மைத்திரிபால சிறிசேனவின் முகத்தைக் காட்டி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவதென்பது யதார்த்தத்தை மாற்றும் செயலெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய ஹெல உருமய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய எதிரணியானது வெள்ளை, கறுப்பு வானம், பூமி ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒன்று சேர்த்து ஒரு குழப்பமாக அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கின்றது. இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் 24 மணித்தியாலயங்கள் அல்லது நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்துள்ளனர்.
நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை அவசியம். அது அவர்களிடம் இல்லை யெனவும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.
இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரத் அமுனுகம நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையை அடைந்திருப்பதாகவும் எதிரணியினருக்கு இதுவரையில் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதாரம் ஆகியன குறித்து தூர நோக்கு இல்லை எனவும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

ad

ad