புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2014

லலித், குகன் காணாமல் போனமை குறித்து யஹகலிய ரம்புக்வெலவிற்கு யாழ்.நீதிமன்றம் அழைப்பாணை
ஊடகத்துறை அமைச்சர்; ஹெக லியரம்புக்வெலவிற்;கு யாழ்.நீதிமன்றம் இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை விடுத்துள்ளது.

காணாமல் போன லலித், குகன் வழக்கு விசாரணையின் போதே இவ் அழைப்பாணை விடுக்கப்பட் டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதியன்று மக்கள் போராட்ட இயக்கத்தினைச் சேர்ந்த லலித், குகன் ஆகியோர் அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் காணாமல்;போயிருந்தனர்.

சர்வதேச மனிதவுரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி யாழ்.நகரில் பாரியதொரு ஊர்வலம் ஒன்றினை சோசலிச சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இவ் இருவரும் காணாமல் போயிருந்தனர்.

இவ் இருவரும் காணாமல் போனமை தொடர்பில் இலங்கைப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க, அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக யாழ்.நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் பலரது வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்  கடந்த 3 வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகின்றது.

லலித், குகன் காணாமல் போய் சில மாதங்களின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துநெத்தி பாராளுமன்றில் கேள்விக்கு உட்படுத்தியிருந்தார்.

இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் யஹகலிய ரம்புக்வெல ஊடக சந்திப்பு ஒன் றில் லலித், குகன் காணாமல் போகவில்லை எனவும் அவர்கள் அரசினாலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையின் பின்னர் இருவரும் விடுவிக்கப்படுவர் எனவும் கூறியிருந்தனர்.

யஹகலியவின் இப்பேட்டியினை சிரச தொலைக்காட்சி அன்றே ஒளிபரப்பியிருந்தது.
சிரச தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி தொடர்பில் விளக்கம் அளிக்கக் கோரியே யாழ்.நீதிமன்றம் ஊடகத்துறை அமைச்சருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது

ad

ad