புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2014

காங்கிரஸ் இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சியல்ல: சொல்கிறார் குஷ்பு
ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது. உழைப்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ள  நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சி என்றுமே இலங்கை தமிழர்களுக்கு
எதிராக செயல்பட்டதில்லை  என தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களுக்கும் முன்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு குஷ்பு பேட்டி அளித்தார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

அப்போது குஷ்பு கூறுகையில், காங்கிரசில் இணைந்தது திசை மாறி போய் மீண்டும் வீடு திரும்பியது போல் உணர்கிறேன். காங்கிரஸ் கட்சியால் நாட்டை எவ்வாறு காப்பற்ற முடியும் என்பதை விளக்க நான் கிராமங்கள் மற்றும் தெருக்கள் தோறும் பிரசாரம் மேற்கொள்வேன்.

ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது. உழைப்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும். எனக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சி மேலிட தலைவர்களுக்கு தெரியும். காங்கிரஸ் கட்சி மீது முழு நம்பிக்கை உள்ளதால் இங்கு இணைந்துள்ளேன். கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களில் ஒருவராக காங்கிரஸ் கட்சிக்கு பாடுபடுவேன். சாதி மத பேதமின்றி சேவை செய்ய காங்கிரசால் மட்டுமே முடியும்.

தி.மு.க.வில் இருந்து ஏன் வெளியேறினே
ன் என்று அப்போதும் சொல்லவில்லை. இன்றும் சொல்லமாட்டேன். நாளை கேட்டாலும் சொல்லமாட்டேன்.

காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழருக்கு எதிரானதாக இருந்தது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு கட்சி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயமாக ஒரு தீவிரவாத இயக்கம்தான்.

தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம். காங்கிரஸ் என்றுமே இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. ஆனால் இலங்கை  தமிழர்களுக்கு எதிரான ஒரு கட்சி என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது" என்றார். 

ad

ad