புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

யாழில் மட்டுமே இடம்பெற்ற அதிசயம்: அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்
புவியியல் ரீதியாக பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மாவட்டமாக யாழ். மாவட்டமே விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது யாழில் மட்டுமே இந்த வருடம் அதிசயிக்கத்தக்க விடயம் ஒன்றும் இடம்பெற்றது.
அதாவது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் வரட்சி, வெள்ளம் ஆகிய இரண்டு அனர்த்தங்களும் இடம்பெற்று ஒருபுறம் வரட்சி நிவாரணமும் மறுபுறம், வெள்ள நிவாரணம் போன்ற இரண்டையும் யாழ். மாவட்டமே பெற்றுக் கொண்டதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இன்று காலை 9மணியளவில் யாழ்.மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
ஆழிப்பேரலையின் காரணமாக மக்கள் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதில் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரகடனப்படுத்தப்பட்ட தினமாக இன்றைய தேசிய பாதுகாப்பு தினம் அமைந்திருக்கின்றது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் அகில இலங்கை ரீதியிலே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவரை நினைவுகூருகின்றனர்.
எதிர்காலத்தில் இயற்கை அழிவிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் எத்தகைய நடவடிக்கையினை மேற்கொண்டு இருக்கின்றோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இதேவேளை இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். குறிப்பாக 3 வருடங்களாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்று விசேடமாக பள்ளத்தோட்டம், இராஜகிராமம் ஆகிய வடிகால்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இயற்கை அனர்த்தத்திலிருந்து எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ad

ad