புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2014

பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை
பொது வேட்பாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது. இதனை வைத்து நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என்பதனாலேயே தான் கட்சியிலிருந்து விலகியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தான் கட்சியை விட்டும் விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிப்பது எனத் தீர்மானித்தது. இவற்றில், 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதிக்குள்ள
நிறைவேற்று அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்குதல்,
அரசாங்கத்திலுள்ள 20 அமைச்சர்களை எதிர்க்கட்சிக்கு அழைத்துவருதல்,
100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குதல் என்பன அடங்குகின்றன.
இந்த எந்தவொன்றும் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதனாலேயே தான் கட்சியிலிருந்து விலகியதாகவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad