புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

கழகங்களுக்கிடையிலான பிபா உலகக்கிண்ண காற்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றது.


இப் போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி, ஆர்ஜென்டினாவின் சான்லா ரன்சோ அணிகள் மோதின.

அபாரமாக ஆடிய ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ரியல் மாட்ரிட் அணி சார்பில் ரமோஸ் (37வது நிமிடம்), பாலே (51வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.

இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி, கழக அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தொடரில் முதன் முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தவிர, இத்தொடரில் கிண்ணம் வென்ற 9 ஆவது அணி என்ற பெருமை பெற்றது.

இத்தொடரில் ஸ்பெயினின் பார்சிலோனா (2009, 11), பிரேசிலின் கோரின்தி யன்ஸ் (2000, 12) அணிகள் தலா 2 முறை கிண்ணம் வென்றன.

சாவ் பாலோ (2005), இன்டர்னாசியோனல் (2006), மிலன் (2007), மான்செஸ்டர் யுனைடெட் (2008), இன்டர்னா ஜியோனல் (2010), பேயர்ன் முனிக் (2013) தலா ஒரு முறை கிண்ணத்தை வென்றுள்ளன.

கழக அணிகளுக்கு இடையிலான 11வது ‘பிபா’ உல கக்கிண்ண காற்பந்து தொடர் மொராக்கோவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 
பிபா உலகக்கிண்ண காற்பந்து ரியல் மாட்ரிட் அணி சம்பியன்

ad

ad