புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

கூட்டம் இடைநிறுத்தப்பட்டமைக்கு நான் மட்டும் பொறுப்பல்ல - டக்ளஸ்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடைநிறுத்தப்பட்ட மைக்கு நான் மட்டும் பொறுப்பு அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்  குழுக்கூட்டம் நேற்றைய தினம் இணைத் தலைவர்களான அமைச்சர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்.மாவட்ட செயல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வட மாகாண சபைக்கான நிதி தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும் வட மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் சபையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அவரது அலு வலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப் பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே செயற்பட்டார்கள்.

மாகாணசபையில் தினமும் குழப்புபவர்கள், செங்கோல் எறிபவர்கள் இங்கும் அதே போன்ற செயற்பாட்டில் ஈடுபட பார்க்கிறார்கள்.

நான் எனது உரையை ஒரு வரையறைக்குள்தான் ஆற்றினேன். என்னுடைய உரைக்கு அவர் பதில் அளிக்க நான் அனுமதித்ததால் மற்றவர்கள் உரையாற்ற வேண்டி வரும்.

அங்கு முதலமைச்சர் பாரபட்சமாக செயற்பட்டதாக தெரியவில்லை. இங்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டுள்ளார்கள். இந்தச் செயற்பாடு ஒரு அசிங்கமான செயல் என்றார்.

இதன்போது குறிக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர், இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தகுதி இல்லாத மர்ம நபர்கள் சிலரும் ஈ.பி.டி.பி உறு ப்பினர்களும் இணைந்து அத்தருணத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த வடக்கு மாகா ணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களின் ஒலிவாங்கியைப் பிடுங்க எத்தனித்து ள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

அதுபற்றி அதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு வந்தவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்களே.

இந்தக் கூட்டத்தில் கலந்த கொண்டவர்கள் மக்களின் பிரதிநிதிகளே என்றார்.
முதல்வர் அழுத்தம் காரணமாக அவ்வாறு கூறியிருக்கலாம்.

அத்துடன் இதற்கு முழுப்பொறுப்பும் உங்களை சாரும் என முதலமைச்சர் கூறியுள்ளார்? என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
தனிய நான் இதற்கு பொறுப்பேற்க முடியாது.

ஆனால் இதற்கான தார்மீக கடமை என்னிடம் உள்ளது. ஆனால் முதலமைச்சர் சொல்வதை உறுப்பினர்கள் கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு கேட்டிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது.

சில நல்லெண்ணத்தோடு செயற்படுபவர்கள் நல்லிணக்கத்திற்கு வருமாறு கேட்கிறார் கள். அது வரவேற்கத்தக்கது என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் அண்மையில் சுன்னாகத்தில் நிலத்தடி நீர்மாசடைதல் தொடர்பாக நான் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டேன்.

அந்த பகுதியை குடிநீர் பாவனைக்கு உதவாதது என பிரகடனப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக திறைசேரி நிதி ஒதுக்கியுள்ளது.

அதோடு இரணைமடுத்திட்டத்திற்கும் தமக்கும் பொறுப்பில்லை என முதலமைச்சர் கூறியுள்ளார். அது தவறானது. அவருக்கு முழு அதிகாரமும் உள்ளது. அரசு அதில் தலையிட வில்லை என்றார்.    
 

ad

ad