புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014


யாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு 
சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று  யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
 
 
இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார். 
 
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், வடக்கு மாகாண முதலமைச்சர்,வடக்கு மாகாண கல்வி அமைச்சர், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்,வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ad

ad