புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2014

கச்சத்தீவு உரிமை கொண்டாடக்கூடிய பகுதி: இல.கணேசன் பேட்டி
கச்சத்தீவு நாம் உரிமை கொண்டாடக்கூடிய பகுதியாகும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

தமிழக மீனவர்கள் பிரச்னையில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கும், தற்போதைய பாரதீய ஜனதா கட்சிக்கும் வேறுபாடு இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.

தற்போது இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் பிடிக்கப்பட்டாலும், அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு விடுகின்றனர். இலங்கை அரசால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் காரணம்.

மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை பா.ஜ.க. அரசு செய்யும். இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வரை கடலுக்குள் செல்வதில்லை என்று தமிழக மீனவர்கள் முடிவெடுத்திருப்பதாக அறிகிறேன். அவர்களின் முடிவை நான் வரவேற்கிறேன்.

கச்சத்தீவை தேவையில்லாமல் இலங்கைக்கு தாரை வார்த்திருக்கிறார் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி. கச்சத்தீவு நாம் உரிமை கொண்டாடக்கூடிய பகுதியாகும். தமிழக மீனவர்கள் நலன்கருதிதான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் கூறி, நியாயம் கற்பிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

கச்சத்தீவில் மீன் வலைகளை காய வைக்கவும், அங்குள்ள கிறிஸ்தவர் கோயிலில் சென்று வழிபடவும் தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கும் போது, கச்சத்தீவில் ஏன் மீன்பிடிக்க உரிமை இருக்காது என்றார். 

ad

ad