புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2014

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மாக் த்ரீ ராக்கெட்! ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆளில்லா விண்கலம்


விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ஆய்விற்கான சோதனையையொட்டி, ஜி.எஸ்.எல்.வி. மாக் த்ரீ ராக்கெட் வியாழக்கிழமை காலை விண்ணில் ஏவப்பட்டது. 

இதன் முன்பகுதியில் மனிதர்கள் வசிக்கத் தேவைப்படும் பொருட்களுடன் இருப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருப்பிடத்துடன் விண்யில் பாயும் ராக்கெட்டிற்கான கவுண்டன் புதன்கிழமை காலை தொடங்கியது. திட்டமிட்டப்படி வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் ஜி.எஸ்.எல்.வி. மாக் த்ரீ ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டா சத்தீஷ்தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 

புறப்பட்ட 325வது நொடியில் மனிதர்கள் வசிக்கத் தேவைப்படும் பொருட்களுடன் கூடிய இருப்பிடம் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. பின்னர் அந்த இருப்பிடம் மட்டும் பாராசூட் மூலம் அந்தமான் நிக்கோபார் தீவு அருகே வங்க கடலில் விழுந்தது. அப்படி கடலில் விழும் அந்த இருப்பிடத்தை பத்தரமாக மீட்டு வரும் பொறுப்பை இந்திய கடற்படை ஏற்றுக்கொண்டுள்ளது. 

இந்த திட்டத்தின் ஒட்டு மொத்த பணிகளும் சுமார் 20 முதல் 30 நிமிடங்களுக்குள் நிறைவடைந்தது. 

இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 155 கோடி ரூபாய் ஆகும்.

ad

ad