புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2014



பெய்து வரும் மழை தொடருமாகில் பாவற்குளத்தில் நீர்மட்டம் உயரும் வவுனியா அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எச்சரிக்கை

வவுனியாவில் பெய்துவரும் கடும்மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து இந்நிலை தொடருமாகில் அதன் வான் கதவுகள் திறக்கப்படலாம் என வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என் சூரியராஜா எச் சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் பெய்துவரும் கடும்மழை காரணமாக செட்டிகுளம்-பூவரசன்குளம் ஊடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் அண்மைக்காலமாக பெய்த கடும் மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது. இதனால் செட்டி குளம்- பூவரசன்குளம் போக்குவரத்து பாதை தடைப்பட்டது.

இதேபோன்று நெடுக்குளம்-செட்டிகுளம் வீதியும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தன.

இதேவேளை பாவற் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.தொடர்ந்தும் மழை பெய்தால் அதன் வான் கதவுகள் திறக்கப்படலாம்.

அதனால் செட்டிகுளத்தில் உள்ள மீடியாபாம், கந்தசாமி நகர், பாவற்குளம் படிவம் நான்கு, மெனிக்பாம் ஆகிய பகுதி மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.    

ad

ad