புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2014

காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பாஜகவுக்கு நிபந்தனையின்றி ஒமர் அப்துல்லா ஆதரவு?

காஷ்மீர் மாநில சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்க வில்லை. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜன நாயக கட்சி-28, பா.ஜ.க.-25, தேசிய மாநாட்டு கட்சி-15, காங்கிரஸ்-12 இடங்களில் வெற்றி பெற்றன.

காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவையாகும். தேர்தலை சந்தித்த நான்கு முதன்மை கட்சிகளும் எதிரும், புதிருமான கொள்கைகளைக் கொண்டவை. இதனால் புதிய ஆட்சி அமைவதில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது.

28 இடங்களை வைத்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி, 25 இடங்களில்  வென்றுள்ள பா.ஜ.க. ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு கட்சி தலைமையிலேயே புதிய ஆட்சி உருவாக  வாய்ப்புள்ளது. 

அரசியல்  களத்தில் எதிரிகளாக உள்ள தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரசிடம் போய் எப்படி ஆதரவு கேட்பது என்று ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் முயற்சியை பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் தொடங்கியுள்ளனர். டெல்லியில் நேற்று மோடி தலைமையில் நடந்த பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் இதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

காஷ்மீரில் பா.ஜ.க. தலைமையில் புதிய கூட்டணி அரசை ஏற்படுத்தும் பொறுப்பை மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி, கட்சி செயலாளர் அருண்சிங் இருவரிடமும் மோடி ஒப்படைத்துள்ளார்.   அவர்கள் இருவரும் ஓரிரு தினங்களில் காஷ்மீருக்கு செல்ல உள்ளனர். அதன் பிறகு காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் முயற்சிகளை பா.ஜ.க. தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே காஷ்மீரில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் புதிய ஆட்சிக்கான அடித்தளத்து வேலைகளை ஓசையின்றி செய்து வருகிறார்கள். அதன்படி 5 சுயேட்சைகளில் 3 சுயேட்சைகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளனர். அந்த 3 சுயேட்சைகள் ஆதரவு கிடைத்து விட்டால் பா.ஜ.க. பலம் 28 ஆகி விடும். இதன் மூலம் அதிக இடங்களை வைத்துள்ள கட்சி என்ற அடிப் படையில் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருது கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு தற்போது 2 விதமான முடிவு எடுக்கும் நிலை உள்ளது. ஒன்று மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவை பெறுவது, அல்லது தேசிய ஜனநாயகக் கட்சி ஆதரவைப் பெறுவது. 
 இதில் எந்த நிலை  எட்டப்படும் என்பது இன்று காலை வரை கேள்விக் குறியாக இருந்தது.

ஆனால் காலை 10 மணி அளவில் இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர்அப்துல்லா இன்று காலை திடீரென டெல்லி வந்தார்.
பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவை உமர்அப்துல்லா சந்தித்து பேசினார். அப்போது பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் மாதவும் உடன் இருந்தார். அவர்கள் காஷ்மீரில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.

பா.ஜ.க. ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர்அப்துல்லா எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி பா.ஜ.க. தலைவர்களோ, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்களோ அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

அமித்ஷாவை சந்தித்து பேசி முடித்த பிறகு உமர் அப்துல்லா உடனடியாக காஷ்மீர் புறப்பட்டு சென்று விட்டார். அவர் முன்னதாக வெளிநாடு செல்ல திட்ட மிட்டிருந்தார். அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு அவர் தன் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டார். எனவே இன்னும் ஓரிரு நாளில் காஷ்மீரில் பா.ஜ.க. - தேசிய மாநாட்டு கட்சிகளின் கூட்டணி ஆட்சி பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. 

ad

ad