புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மக்களை த.தே.கூட்டமைப்பு சந்திப்பு - கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடல்.


இன்று அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று கல்முனை. நிந்தவூர், பாண்டிருப்பு, போன்ற இடங்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசபை உறுப்பினர் சியாம் சுந்தர், ...
.. கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், கலையரசனின் பிரத்தியேக செயலாளர் பா.புவிராஜ் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சகிதம் பல கிராமங்களுக்கும் சென்று அவர்களது நிலமைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிந்து கொண்டார்
இது தொர்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருத்துத்தெரிவிக்கையில்

அம்பாறை மாவட்டமானது இம்முறை ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதோடு இங்குள்ள மக்கள் பெரும் இன்னல்களை தொடர்ந்து அனுபவித்து வருகின்றார்கள்.
இவர்கள் தொடர்பான நிலைப்பாட்டினை எமது தமிழசிக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு தெரியப்படுத்தியதோடு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனங்கள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தேன் அதற்கிணங்க தான் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதாகவும் மக்களை சென்றடயக்கூடிய விதத்தில் நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளிததார்.
அத்தோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வந்து பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உதவிகளை நாளையில் இருந்து உடனடியாக மேற்கொள்வதாகவும் இதற்கு புலம்பெயர் அமைப்புக்களும் தங்கலாளான நிதி உதவிகளை தருவதற்கு முன்வந்திருக்கின்றது எனவும் அதனையும் பெற்று பாதிக்கப்ட்ட அனைத்து மக்களுக்கும் அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட துரைவந்தியமேடு, பாண்டிருப்பு சுனாமி வீட்டுத்திட்டத்திற்கான உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில்நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே. மகேசன் தெரிவித்தார்.
இருப்பினும் அரசடியிலுள்ள மருத்து பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடரும் என்றும் தேவையேற்படின் அதன் கல்வி நடவடிக்கைகளும் பிற்போடப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்தார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சைகளுக்கான் தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் ஒரு வார கால விடுமுறை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. அதன் படி திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் இருப்பினும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad