புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

செங்கலடி செல்லம் படமாளிகை மீது தாக்குதல்!- பிள்ளையான் குழுவினர் அட்டகாசம்
மட்டக்களப்பு செங்கலடி செல்லம் படமாளிகை மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வால், கம்புகளுடன் வருகை தந்த விஜிதரன் தலைமையிலான பிள்ளையான் குழுவினரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் செல்லம் படமாளிகையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் படமாளிகையின் பணியாளர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்.
ஜனாதிபதி மட்டக்களப்பு வருகை! ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரின் படமாளிகை மீது தாக்குதல்!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று(19) மட்டக்களப்புக்கு வருகைதரவுள்ள நிலையில் செங்கலடி மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மோகன் அவர்களுக்கு சொந்தமான இலங்கையின் முதல்தர படமாளிகையான செல்லம் சினிமா படமாளிகை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் வருகையையொட்டி மதுபோதையில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த விஜிதரன் தலைமையிலான பிள்ளையான் குழுவினர் செங்கலடி மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் இலங்கையின் முதல்தர படமாளிகையென இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் சான்றிதழ் வழங்கப்பட்ட செல்லம் சினிமா படமாளிகை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் படமாளிகைக்கு சொந்தமான முச்சக்கரவண்டி ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், படமாளிகைக்கு முன்னால் இருந்த கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு இரண்டு ஊழியர்களும் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மோகன் அவர்கள் தெரிவிக்கையில்,
நேற்றில் இருந்து ஜனாதிபதியின் வருகைக்காக ஆட்களை பலவந்தமாக திரட்டும் நடவடிக்கையில் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் நாங்கள் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
நாங்கள் எங்களது கட்சி நடவடிக்கைகளை ஜனநாயக முறையில் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இன்று(19) அதிகாலை எம் மீதும் எமக்கு சொந்தமான படமாளிகை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலை வாள், கம்புகள், கத்திகளுடன் வருகை தந்த காடையர்களே நடத்தினர். அவர்கள் அனைவரும் மது அருந்தியிருந்தனர். அவர்கள் அனைவரையும் எனக்கு நன்றாக தெரியும்.
அவர்கள் குறித்து நான் பொலிசாரிடம் முறையிட்டுள்ளேன். அன்று அண்ணன் தம்பியாக பழகியவர்கள் இன்று தென்னிலங்கை அரசியல் தலைவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்காக எங்களை தாக்க வந்துள்ளனர்.
எங்கோ இருக்கும் தலைமைகளுக்காக இங்குள்ள தமிழ் தலைமைகள் மோதிக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. நானும் எனது ஆதரவாளர்களும் இந்த அரசின் மீது ஏற்பட்ட விரக்தி காரணமாகவே எதிரணியை தெரிவு செய்துள்ளோம்.
இது எமது ஜனநாயக உரிமை. அது போன்று அவர்கள் ஆளும் தரப்பை ஆதரிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அது அவர்களது ஜநனாயக உரிமை.
எங்களை யாரும் வற்புறுத்தியோ, தாக்குதல் நடத்தியோ இந்தக் கட்சியில்தான் இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. அவ்வாறு இனியும் கூற முற்படுவார்களானால் அது எதிர்காலத்தில் பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே சம்மந்தப்பட்ட தலைமைகள் உடனடியாக இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டுமென இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

ad

ad