புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

நேற்று இறுதிக்கட்ட பேச்சு இன்று கட்சியின் இறுதி முடிபு ஸ்ரீ.மு.காவின் நிலை திண்டாட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை பெரும்பாலும் எடுத்துள்ளது.

இந்தநிலையில் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இறுதிக் கட்டமாக  அமைச்சர் ரவூப் ஹக்கீம் அலரி மாளிகைக்கு சென்று பேசியுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று இறுதி அறிவிப்பை வெளியிடவுள்ளது.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்த தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்கத் தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இறுதி முடிவை அறிவிக்கும் நிலையில் அந்தக்கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்படி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி மகிந்த ராஜப க்ஷவுக்கு ஆதரவளிப்பர் என்று கூறப்படுகிறது.

எனினும் அரசாங்கத்தில் இருந்து விலகி பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டிய பாரிய அழுத்தத்துக்கு கட்சி தலைமை தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad