புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2014

வடமாகாணசபை இன்றைய அமர்வில் சிவாஜிலிங்கம் செங்கோலை வீசியதால் பரபரப்பு! - தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தும் பாடப்புத்தகங்கள்
தன்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. என கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இன்று நடைபெற்ற  20வது சபை அமர்வின் போது  செங்கோலை தூக்கி வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சிவாஜிலிங்கம் ஒரு பிரேரணையினை முன்மொழிந்திருந்தார். அதில் குறிப்பாக தமிழர் தாயகத்தில் நடைபெற்றது இன அழிப்பு என இச்சபை நம்புகின்றது. என கூறப்பட்டிருந்தது.
 குறித்த பிரேரணையினை நிறைவேற்ற வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மாகாணசபையிடம் கேட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பிரேரணை 6மாதங்களின் பின்னர் இன்று சபைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த பிரேரணையினை சபைக்கு எடுப்பதா இல்லையா என சபையிடம் கேட்கப்பட்டது.
அதற்கு சபை அமைதியாக சம்மதம் தெரிவித்த நிலையில், குறித்த பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு முன்மொழியப்பட்டு வழிமொழியவும் பட்டது. இந்நிலையில் அதனை முழுமையான பிரேரணையாக்கி எதிர்வரும் தைமாதம் முன்மொழியுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சபையில் கேட்டுக் கொண்டார்.
ஆனால் பிரேரணையினை வாக்கெடுப்பிற்கு விடுமாறு சிவாஜிலிங்கம் கேட்டார். ஆனால் வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு மறுப்பு தெரிவித்த அவைத்தலைவர் எதிர்வரும் தைமாதம் அதனை எடுத்துக் கொள்வதாக கூறினார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த சிவாஜிலிங்கம் அவை தலைவர் ஆசனத்தின் முன்னால் இருந்த செங்கோலை தூக்கி வீசினார். இதனால் சபையில் பெரும் பரபரப்பு உண்டானது. எனினும் உடனடியாக சபை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழர்களின் வரலாறுகளை திரிவுபடுத்தும் பாடப்புத்தகங்கள்
இலங்கையின் வரலாற்றுப் பாட புத்தகங்களில் தமிழர்களின் வரலாறுகள் மறைக்கப்படும் நிலையில் தமிழர்களின் செம்மையான வரலாற்றை கூறும் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வடகிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளில் வழங்கப்பட வேண்டும் என வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 20வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றபோது மேற்படி தீர்மானம் மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதியினால் கொண்டு வரப்பட்டு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் தொடர்பான விவாதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
பல வருடங்களுக்கு முன்னர் தொடக்கம், வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் தமிழர்களின் வரலாறுகள் பெரியளவில் இடம்பெறாமை காணப்பட்டது. அண்மையில் வந்த புத்தங்களில் சிறியளவில் இடம்பெற்ற வரலாறுகளும் குறைக்கப்பட்டு, அவையும் மறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழர்களின் செம்மையான வரலாற்றை கூறும் பாட புத்தகங்கள் அச்சிடப்பட வேண்டும்.
அவற்றை சிங்களவர்கள் ஏற்கமறுத்தால் அதனை வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப் படுத்தவேண்டும். மேலும் தமிழர்களின் வரலாற்றை மறைத்து சிங்களவர்களின் வரலாற்றை பெருமைப்படுத்தி அதன் மூலம் தமிழர்கள் இந்த நாட்டில் வந்தேறுகுடிகள் என அடையாளப்படுத்தவும் அவர்களுடைய வருங்கால சந்ததியினர் மனதில், அதனை விதைக்கவும் அவர்கள் நினைக்கிறார்கள்.
இந்நிலையிலேயே மகாவம்சம் போன்ற புனைகதைகளையும் பாடப்புத்தகங்களில் போட்டு அதனை உன்மை என நிருபிக்க நினைக்கிறார்கள். எனவே தமிழர்களின் வரலாறு பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.
அதற்கு வடமாகாணசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டது.

ad

ad