புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2014

திமுகவுடன் கூட்டணிக்கு சாத்தியமில்லை: இல.கணேசன்


 

பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று நெல்லை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’பா.ஜனதா கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25–ந்தேதியன்று வாஜ்பாய் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இந்தாண்டு பா.ஜனதா ஆளும் கட்சியாக இருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கட்சிகள் தவறாக சித்தரிக்கிறார்கள்.

வாஜ்பாய் ஆட்சியின் போது அவர் கொண்டு வந்த நாற்கார சாலை திட்டம், நதிநீர் இணைப்பு திட்டம் ஆகியவை இன்றும் பேசப்படுகிறது. நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தீபகற்ப நதிகளை இணைக்க பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளை இணைத்து கர்நாடகாவிற்கு செல்லாமல் தமிழக பகுதியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இணைக்கும் திட்டத்திற்கு முதல் கட்டமாக பட்ஜெட்டில் ரூ.300கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த முதல்–அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக நதிகளை இணைக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நியாயமான இந்த கோரிக்கைக்கு கூடுதல் நிதி ஒதுக்க நாங்களும் வலியுறுத்துவோம்.

தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது. எனவே மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க.–அ.தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. 1965–ல் காங்கிரஸ் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. இப்போது தமிழக மக்கள் பா.ஜனதா கட்சியை ஒரு மாற்றாக நினைக்கிறார்கள். எனவே தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 19 சதவீத வாக்குகள் பெற்றது.

2016சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தொடரும். மேலும் பல்வேறு கட்சிகள் இணையும். இதனால் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணிக்கு சாத்தியமில்லை’’என்று கூறினார்.

ad

ad