புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2014

அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக்: உலகசாதனை படைத்த வங்கதேச வீரர்

வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து உலகசாதனை படைத்துள்ளார்.

22 வயதாகும் தைஜுல் இஸ்லாம் இடது கை சுழற்பந்து வீச்சாளர். இவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெறும் 5வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கி ஹாட்ரிக் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இவர் 7 ஓவர்கள் வீசி 2 மெய்டன்களுடன் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஜிம்பாப்வே அணி 30 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஜிம்பாப்வே அணி 26வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 120 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது.
அப்போது தைஜுல் இஸ்லாம் 27வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அவர் சாலமன் மைர் என்பவரை அந்த ஓவரின் முதல் பந்தில் எல்.பி. செய்தார்.
அதே ஓவர் கடைசி பந்தில் பன்யாங்கராவை பவுல்டு செய்தார். பிறகு 29வது ஓவரின் முதல் 2 பந்துகளில் நயம்பு மற்றும் சடாரா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஹாட்ரிக் எடுக்கும் 4வது வங்கதேச பவுலர் தைஜுல் ஆவார். இதற்கு முன்பு ஷஹாதது ஹுசைன், அப்துர் ரசாக், மற்றும் ரூபல் ஹுசைன் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
129 ஓட்டங்கள் இலக்கை எதிர்த்து விளையாடிய வங்கதேசம் 24.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ad

ad