புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2014

மகிந்தவுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்ச்சிகளை நிறுத்தவும்: அரச தொலைக்காட்சிகளுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையாளர்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்ச்சிகளை நிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அரச தொலைக்காட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சிகள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் நிகழ்ச்சிகளை வழங்கி வருவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் இருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் ஆணையாளர் கூறியுள்ளார்.
அரச தொலைக்காட்சிகளின் இந்த செயல் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கு கடும் இடையூறாக இருப்பதாக அரச இலத்திரனியல் ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையாளர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் கூறியுள்ளார்.
இரண்டு கோடி மக்களை கொண்ட இலங்கையில், அனைத்து மக்களுக்கும் சென்றடைய கூடிய நிகழ்ச்சிகளை இரண்டு அரச தொலைக்காட்சிகளே ஒளிபரப்பி வருகின்றன.
இதனால், அரசியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் முன்னர் தன்னிடம் ஆலோசனைகளை பெறுமாறு தேர்தல் ஆணையாளர் அரச ஊடகங்களின் பிரதானிகளிடம் கோரியுள்ளார்.
அத்துடன் தேர்தல் சட்டத்தை மீறியமைக்கான பொறுப்பை அரச ஊடகங்களில் தலைவர்கள் ஏற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச வாகனங்கள், அரச ஊழியர்கள் அதிகளவில் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக தேசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
அதேவேளை ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களில் பங்குபற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் தகவல்களை சேகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad