புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

லாகூர் சிறையை தகர்க்க தீவிரவாதிகள் சதி: பாகிஸ்தான் பாதுகாப்பு படை முறியடித்தது

பாகிஸ்தானில்  50 க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் காட் லாக்ப்த் சிறையை தகர்க்கும்  தீவிரவாதிகளின் சதியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். இது தொடர்பாக இரண்டு பெண்கள் மற்றும் ஒருவரை கைது செய்துள்ளனர்.

தீவிரவாதிகளின் சதிதிட்டத்தை நாங்கள் முறியடித்து விட்டோம். மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் நபரை கோத் லக்பத் ஜெயில் சிறை அருகே உள்ள பரித் காட் காலனியில் கைது செய்துள்ளோம் என்று லாகூரில் உள்ள போலீஸ் மூத்த அதிகாரி தெரிவித்தார். 

லாகூரின் லோக்பத் பகுதியில் உள்ள மத்திய சிறையை தகர்த்து அங்கு அடைக்கப்பட்டு இருக்கும் 50 தீவிரவாதிகளையும் விடுவிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பரித்கோட் காலனியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அவர்கள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டுக்குள் ராக்கெட் லாஞ்சர், ராணுவ வீரர்கள் அணியும் சீருடை, காலணிகள், துப்பாக்கிகள், வில்-அம்புகள், மொபைல்போன், சிம்கார்டுகள் ஆகியவற்றை அவர்கள் கைப்பற்றினர். இதையடுத்து அந்த வீட்டில் இருந்
த 2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரை அவர்கள் கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் மூவரும் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, துணை போலீஸ் ஐ.ஜி. ஹைதர் அஷ்ரப் கூறுகையில், இந்த 3 பேரும் லாகூர் மத்திய சிறையை தகர்த்து, அங்கு அடைக்கப்பட்டு உள்ள அத்தனை தூக்குத் தண்டனை கைதிகளையும் விடுவிக்க சதித் தீட்டம் தீட்டி இருக்கிறார்கள். உரிய நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டால் சிறையை தகர்ப்பதற்கான தீவிரவாதிகளின் முயற்சி தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட்டு விட்டது என்றார்.

இவர்களில் உமர் நதீனம், அசான் அசிம், அமீர் யூசூப், ஆசிப் இத்ரீஸ், கம்ரான் உள்பட ஆகிய 5 பேருக்கும் விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ad

ad