புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

பாலசந்தர் எங்கள் காலவேந்தர்-அ.பகீரதன்



பாலசந்தர்
எங்கள் படவுலகில்
முடிசூடா வேந்தர்
தமிழிற்கு அகரம் போல்
சினிமாவிற்கு சிகரம்
கேபி எனும் அந்த உயரம்-அதை 
இழந்தது பெருந் துயரம்
இரசிகர்களின்
இதயத் துடிப்பறிந்த
சினிமா வைத்தியர்


”உன்னால் முடியும் தம்பி”
நல்ல படமெடுத்து
தன்னால் முடியுமென நிரூபித்தவர்
கதைகளைக் களவாடாமல்
மனங்களைக் களவாடிய
உள்ளங்கவர் கள்வர்
விருதுகளை வாங்கி அதை
தன்தகுதியாக்கிக் கொள்ளாமல்
தன்தகுதிகளால் விருதுகளை
குவித்தவர்
பாலசந்தர் எங்கள் வீட்டு
தமிழ் வாத்தியார்
இலகு சொல்லால் சினிமா சொன்ன
இலகு வாத்தியார்
முதுகில் குத்துகின்ற
சினிமா உலகில்
முதுகில் தட்டிக் கொடுக்கும்
மூத்த பண்பாளர்
மனித உறவுகளை வைத்தே
படம் பண்ணியவர்
மனிதர்கள் திருந்தினால்
சமூகம் திருந்துமென நம்பியவர்
வசைபாடி வசைபாடி
வம்புக்கு இழுக்கும் சினிமாவில்
வாழிய வாழிய என
உள்ளத்தால் வாழ்த்திய நல்மனசுக்காரர்
நாயகிகளிடம்
முத்தம் கேட்காமலே
சான்ஸ் கொடுத்த ஒழுக்கசீலர்
உலகத்தையே படம்பிடித்தும்
ஓடாத படங்கள் மத்தியில்
வீட்டுக்குள் மட்டுமே படம்பிடித்து
நூறுநாள் ஓட்டிக் காட்டியவர்
சினத்திலும்
கடுஞ்சொல் வீசாத கண்ணியவான்
கடவுள் பலமறிந்த புண்ணியவான்
வில்லனை கதாநாயகனாகவும்
கதாநாயகனை வில்லனாகவும்
மாற்றிக் காட்டிய வித்தைக்காரன்

நகைச்சுவை நடிகனையும்
நாயகனாக்கிய துணிவுக்காரர்
நாயகனுக்கும் நடிப்பில்
நகைச்சுவை கலந்த புத்திக்காரர்
இறைவனையும் வைத்து
இயக்கிடும் வலிமை பெற்றவர்
இருதகரங்களைத் தங்கமாக்கியதால்
ீஇருவரையும் தன்கரங்களாக்கி பெருமை பெற்றவர்
பாரதிராஜா
பாலுமகேந்திரா
பாக்கியராஜா
இந்தத் தலைகளிற்கே
தலைப்பாகை ஆனவர்
தென்னிந்திய சினிமாவின்
தலைப்பாய் ஆனவர்
எங்கள் ஆசானின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
நன்றி,
அ.பகீரதன்

ad

ad