புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த மஹிந்த அரசாங்கம்


கடந்த அரசாங்கம் 1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக புதிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் அரசாங்கம் இவ்வாறு பாரியளவில் பணத்தை மோடி செய்துள்ளதாக புதிய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளினால் இவ்வாறு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினை சரியான முறையில் செயற்படுத்தி குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்து தற்போதைய அரசாங்கத்திலும் பதவிகள் வகிக்கும் அமைச்சர்கள் அதிகாரிகள் சிலரும் உழல் மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த அரசாங்கம் நான்கு ஆண்டுகளில் 1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பெருந்தெருக்கள், கட்டிட நிர்மானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாரியளவில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன.
ஊழல் மோசடியாளர்கள் எவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளனர், எவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ad

ad